திண்டுக்கல்லில் உப்பு பொரி தயாரிக்கும் பணி தீவிரம்

ஆயுதபூஜையையொட்டி திண்டுக்கல்லில் சுமார் 200 டன் பொரி தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2023-10-22 06:03 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல்லில் தயாரிக்கப்படும் பொரிக்கு என தனி மகத்துவம் உண்டு. இங்கு தயாரிக்கப்படும் பொரிக்கு கர்நாடகாவில் இருந்து அரிசி வரவழைக்கப்பட்டு அந்த அரிசியை உப்பு தண்ணீரால் பதப்படுத்தப்பட்டு பொரியானது தயாரிக்கப்படுகிறது .இங்கு தயாரிக்கப்படும் பொரிகள் உப்பு சுவையுடன் இருப்பதால்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கி உண்பர். திருச்செந்தூர்,நாகர்கோவில், தூத்துக்குடி,ராமேஸ்வரம், மதுரை, தேனி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கிச் செல்வது வழக்கம். விநாயகர் சதுர்த்தி மற்றும் ஆயுத பூஜை என்றால் பூஜைக்கு எந்த பொருள் இடம் பெற்று இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக பொரி இடம்பெற்று முக்கியத்துவம் வகிக்கும் . தற்போது ஆயுத பூஜை நெருங்குவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த ஆண்டு ஆர்டர்கள் அதிகப்படியாக வந்துள்ளதால் தொழிலாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் இரவு, பகலாகச் சுமார் 200 டன் பொரி தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற ஆண்டு ஒரு படி பொரி 3 ரூபாய்க்கு விற்பனையாகி வந்த நிலையில் இந்த ஆண்டு ஒரு படி 4 ரூபாய்க்கு விற்பனையாவதால் உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.



Tags:    

Similar News