உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பு!
போளூர் அருகே சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கப்பட்டது.;
Update: 2024-04-12 15:11 GMT
வாக்கு சேகரிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், போளூர் மற்றும் குப்பநத்தம் பகுதிகளில் தி.மலை நாடாளுமன்ற உறுப்பினருக்கு போட்டியிடும் வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து நகர திமுக செயலாளர் அன்பழகன், சி.பி. எம் தலைமையில் உள்ள தொழிற்சங்கங்கள் சார்பில் உதயசூரியன் சின்னத்திற்கு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் கணபதி, சிவக்குமார், அன்பழகன், லட்சுமணன், குமார், மாரி, பிரகாஷ், பார்வதி, வீரபத்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.