திமுக வேட்பாளரை ஆதரித்து தீவிர வாக்கு சேகரிப்பு!

தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன் வாக்கு சேகரித்தார்.

Update: 2024-04-13 06:17 GMT

வாக்கு சேகரிப்பு

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து மாநில மருத்துவ அணி துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன் திருவண்ணாமலை ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளி கொண்டாபட்டு, ஏந்தல், நல்லவன்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பொன் முத்து, ஒன்றிய செயலாளர் மெய்யூர் சந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News