மாற்றுதிறனாளிகளுக்கு வட்டியில்லா கடன்- நாகை ஆட்சியர் அறிவிப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை மத்திய கூட்டுறவு வங்கிகளை அனுகி வட்டியில்லாக்கடனாக பெறலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-07 02:38 GMT

நாகை ஆட்சியர்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் 2023-2024ம் நிதியாண்டிற்கான மானிய கோரிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட விடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கிக் கடனுதவி வழங்கும் திட்டத்தின் மூலம் ஒவ்வொருவருடமும் 1000 நபர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் ரூ.120.00 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறைகளால் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் செலுத்த வேண்டிய பங்கு தொகைக்கு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1,50,000/- வரை பெறப்படும் கடன் தொகைக்கு ஐந்து வருடகாலத்திற்கு மட்டும் வட்டியில்லாக் கடன் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் அரசால் ஒதுக்கப்பட்ட வீடுக்கான ஆணை நகல், மாற்றுத்திறனாளி தேசிய அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அட்டை (UDID), ஆதார் அட்டை. புகைப்படம் ஆகியவற்றுடன் அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகிளைகளை அனுகி மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டியில்லா வங்கிக் கடனுதவி திட்டத்தின் மூலம் பயனடையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடாம் வர்கீஸ்தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News