இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டம்!

300-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-03-01 08:51 GMT

சம வேலைக்கு சம ஊடதியம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் கைகளில் பதாகைகளை ஏந்தி குடும்பத்தினருடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம வேலைக்கு சம ஊதியம் என்ற திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தினர் தொடர்ச்சியாக பல்வேறு கட்ட போராட்டத்தில் குடும்பத்தினருடன் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று அந்த இயக்கத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பாக சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபடும் ஆசிரியர்களை தமிழ்நாடு அரசு அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதுகுறித்து ஆசிரியை ரூபியா பேகம் என்பவர் திருவிகையில் நாங்கள் கடந்த 12 நாளாக பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

இன்று தமிழக முதல்வர் பிறந்த நாள் என்றாவது எங்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்க வேண்டும் சம விலைக்கு சம ஊதியம் கொடுக்க அவர் முற்பட வேண்டும் இல்லையென்றால் நாங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எங்கள் போராட்டத்தால் பள்ளி குழந்தைகள் பாதிப்படைகிறது ஆகவே எங்கள் கோரிக்கையை ஏற்று உடனடியாக நிறைவேற்ற வேண்டும் அப்படி செய்தால் இன்னும் சில மணி நேரங்களில் நாங்கள் மீண்டும் வேலைக்கு சென்று எங்களுடன் பணியை கவனிப்போம் அவ்வாறு அவர் செல்லவில்லை என்றால் அடுத்த கட்ட போராட்டத்தில் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News