அரசு மகளிர் பள்ளியில் பன்னாட்டு நாணய கண்காட்சி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொன்மை பாதுகாப்பு மன்றம் சார்பில் பன்னாட்டு நாணய கண்காட்சி நடந்தது.

Update: 2024-07-03 03:02 GMT

அரசு மகளிர் பள்ளியில் பன்னாட்டு நாணய கண்காட்சி

தொன்மை பாதுகாப்பு மன்ற மாணவிகள் இந்தியா, இந்தோனேசியா, புருணே, சீனா, ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள். அரபுநாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளின் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களை கண்காட்சியில் வைத்திருந்தினர். பன்னாட்டு நாணய கண்காட்சியனை பள்ளி மாணவிகள் பார்வையிட்டனர். தலைமையாசிரியை ஜெயலதா தலைமை வகித்தார்.

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் முத்து முருகன், முதுகலை ஆசிரியர் கிரேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியை ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். பன்னாட்டு நாணய கண்காட்சியினை மேனாள் கோவில்பட்டி கோட்ட அஞ்சலக விற்பனை பிரதிநிதி ரெங்கசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் பள்ளி ஆசிரியர்கள் சுப்புலட்சுமி, கெங்கம்மாள், நாகலட்சுமி, சுப்பிரமணியன் உள்பட ஆசிரியர்கள், மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியை ஒருங்கிணைப்பாளர் பிரியா நன்றி கூறினார்.

Tags:    

Similar News