பன்னாட்டு இன்னர்வில் நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சி

இராசிபுரம் இன்னர் வீல் சங்கத்தினர் பன்னாட்டு இன்னர்வில் நூற்றாண்டு சிறப்பு நிகழ்ச்சி

Update: 2024-01-31 06:49 GMT
இராசிபுரம் இன்னர்வீல் சங்கம் இளைஞர்கள் வளர்ச்சி உரிமைகளும் கடமைகளும் நிகழ்ச்சி நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பன்னாட்டு இன்னர்வில் நூற்றாண்டு விழா முன்னிட்டு இராசிபுரம் இன்னர் வீல் சங்கத்தினர் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு இன்னர்வீல் சங்க தலைவி சரோஜாகுமார் அவர்கள் தலைமை தாங்கினார் . சங்க முன்னாள் மாவட்ட சேர்மன் தெய்வானை ராமசாமி பொருளாளர் அமலா கீதா, சுந்தரிபாய், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் "இளைஞர்கள் வளர்ச்சி : உரிமைகளும் கடமைகளும்" என்ற தலைப்பில் இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலை கல்லூரி இணைப்பேராசிரியர் மற்றும் அரசியல் அறிவியல் துறைத்தலைவர் முனைவர் இரா.சிவக்குமார்  பேசுகையில்  இளைஞர்கள் தங்கள் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நேர்மை மற்றும் உண்மையுடன் செயல்பட்டால் நினைத்த இலக்கை அடையளாம். சுவாமி விவேகனந்தர் கூறிய அறிவுரைகள் பலவும் இளைஞர்களின் மனதிற்கு கொண்டு சொல்லப்பட்டதாகும். இன்றைய இளைஞர்கள், தங்களை காலத்திற்கு ஏற்றார் போல் தொழில் நுட்ப அறிவு, பாட அறிவு, புதிய சிந்தனை, படைப்பாற்றால் போன்ற திறன்களை வளர்த்து கொண்டு தனித்திறமையுடன் உழைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்றார். இறுதியாக  இன்னர்வீல் சங்க செயலர் சுதாமனோகரன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் என். சிவலீலஜோதி செய்திருந்தார்.
Tags:    

Similar News