விழுப்புரம் நீதிமன்றத்தில் சர்வதேச மகளிர் தின விழா
விழுப்புரம் நீதிமன்றத்தில் சர்வதேச மகளிர் தின விழா வெகுவிமர்சையாக கொண்டாட்டப்பட்டது.
விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுசார்பில் சர்வதேச மகளிர் தின விழா விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சட்டப்பணி கள் ஆணைக்குழு தலைவரும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான பூர்ணிமா தலைமை தாங்கி சிறப்புரையாற்றி சக பெண் நீதிபதிகள் மற்றும் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் பெண் வக்கீல்கள், பெண் பணியாளர்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் ஜெயப்பிரகாஷ் வரவேற்றார். விழுப்புரம் வக்கீல்கள் சங்க தலைவர்கள் தயானந்தம், காளிதாஸ், பன்னீர்செல்வம், நீலமேக வண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழா முடிவில் கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்செல்வன் நன்றி கூறினார். முன்னதாக மகளிர் தின பேரணி நடைபெற்றது. இதில் நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.