திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் உலக மகளிர் தின விழா

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் உலக மகளிர் தின விழா

Update: 2024-03-09 04:29 GMT

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களில் உலக மகளிர் தின விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் முனைவர் மு.கருணாநிதி தலைமை தாங்கினார். விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் குப்புசாமி, தலைமை நிர்வாகி சொக்கலிங்கம், டாக்டர் .கே.சி.கே விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் டாக்டர் தேவி வரவேற்புரை வழங்கினார். இவ்விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டாக்டர் உமா தனது உரையில் இன்றைய நவீன காலத்தில் பெண்கள் சாதிக்காத துறை என்பதே கிடையாது அதிலும் ஆசிரியர் செவிலியர், மருத்துவர், நிதி துறை, நிர்வாக துறை போன்ற பல துறைகளிலும் சாதித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டிலேயே நாமக்கல் மாவட்டத்தில் தான் மாணவிகளுக்கு பெருமளவில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கல்வி உதவித் தொகை வழங்குவதில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டம் விளங்கி வருகிறது என்று கூறினார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட ராணிமாதம்மாள் விஞ்ஞானி இஸ்ரோ திருவனந்தபுரம், டாக்டர் கவிதாசன் ரூட்ஸ் இண்டஸ்ட்ரி லிமிடெட் கோயம்புத்தூர். தனது சிறப்புரையில் “இது என்னடா வாழ்க்கை என்று நினைக்காமல் இது என்னோட வாழ்க்கை என்று நினைத்தால் வாழ்க்கை மாறிவிடும். வாழ்க்கை வாய்ப்புகளை தான் கொடுக்கும் அந்த வாய்ப்பை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம் வாய்ப்பு உன்னை தேடி வந்தால் நீ அதிர்ஷ்டசாலி வாய்ப்பை தேடி நீ சென்றால் புத்திசாலி வாய்ப்புகளே இல்லை என்று நீ வருத்தப்பட்டால் நீ ஏமாளி வாய்ப்பு வரும் என்று நினைத்துக் கொண்டே இருந்தால் நீ கோமாளி. பெண்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றால் தன்னம்பிக்கையும் குறிக்கோளும் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்று எடுத்துரைத்தார்.

விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு.கருணாநிதி தனது தலைமையுரையில் “அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு? என்று கேட்ட நிலையெல்லாம் கடந்து, இன்று பெண்கள் ஆண்களுக்கு நிகராக, ஏன் ஆண்களுக்கே சவால் விடும் பணிகளில் கோலோச்சி வருகிறார்கள். இன்று பெண்கள் தொடாத உயரம் இல்லை, எட்டாத உச்சம் இல்லை. அத்தகைய மகளிருக்கு சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளைத் அவர் தெரிவித்தார்.மேலும் இவ்விழாவில் நாமக்கல் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கன்னிகேஸ்வரி, திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் மோகனபானு, நாமக்கல் இளம்சிறார் நீதிக் குழுமம் எஸ்.ருகையாபேகம், நாமக்கல் பாலம் அறக்கட்டளை தலைவர் நர்மதா தேவி ஆகியோருக்கு சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. மேலும் விவேகானந்த கல்வி நிறுவனங்களில் பயின்று பல துறைகளில் சாதனை படைத்த பெண்கள் மாணவிகள் 5௦ பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கல்லூரின் தாளாளர் விருது வழங்கி கௌரவித்தார்.

இவ்விழாவில் சுமார் 3000 மாணவிகள் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி ஷகிலா நன்றியுரை வழங்கினார் .விவேகானந்தா கல்வி நிறுவனங்களின், அணைத்து கல்லூரி முதல்வர்கள் திறன் மேம்பாடு இயக்குனர் டாக்டர் குமரவேல், அட்மிஷன் இயக்குநர் சௌண்டப்பன், தேர்வாணையாளர் டாக்டர் கண்ணன் , மற்றும் துறைத் தலைவர்கள் பேராசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் ஏற்பாட்டினை நிகழ்வு மேலாளர் பேராசிரியர் த.ஸ்ரீதர்ராஜா ஏற்பாடு செய்திருந்தார்.

Tags:    

Similar News