வெற்றி மகிழ்ச்சியில் பெண் காவலர்கள் உற்சாக நடனம்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கோவை ஆயுத படை பெண் காவலர்களுக்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற பெண் காவலர்கள் டிரம்ஸ் இசைக்கேற்ப உற்சாக நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.;
Update: 2024-03-08 05:18 GMT
உற்சாக நடனமாடிய காவலர்கள்
கோவை:உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் காவலர்களுக்கான மரத்தான் ஓட்டம் நடைபெற்றது.இதில் ஏராளமான பெண் காவலர்கள் பங்கேற்ற நிலையில் மாரத்தான் ஓட்டத்தை கோவை மாநகர அலுவலக தலைமையிடம் துணை ஆணையாளர் சுகாசினி துவங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் ஓட்டம் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் துவங்கி டாக்டர்.பாலசுந்தரம் சாலை,அவிநாசி சாலை, ரேஸ்கோர்ஸ் ஆகிய பகுதிகளுக்கு சென்று மீண்டும் கோவை மாநகர ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் நிறைவு பெற்றது. ஆயுதபடை மைதானத்தில் நடந்த பரிசளிப்பு விழாவின் போது ட்ரம்ஸ் இசைக்கபட்டது.அப்போது மராத்தானில் பங்கேற்று வெற்றி பெற்ற பெண் காவலர்கள் டிரம்ஸ் இசைக்கேற்ப உற்சகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.