உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் சர்வதேச யோகா தின விழா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக சமுதாய சேவா சங்கத்தினர் யோகாசனம் செய்தனர்.;

Update: 2024-06-21 10:25 GMT
உலக சமுதாய சேவா சங்கம் சார்பில் சர்வதேச யோகா தின விழா

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உலக சமுதாய சேவா சங்கத்தினர் யோகாசனம் செய்தனர்.


  • whatsapp icon

ஐ.நா சபையால் கடந்த 2014 ம் ஆண்டு ஜூன் 21 ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையடுத்து இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு வேதாத்திரி மகரிஷியால் உருவாக்கப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தினர்  100 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் உள்பட 300 க்கும் மேற்பட்டோர் பல்வேறு யோகசனங்களை செய்து காட்டினார்.

உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் SKM மயிலானந்தம் தலைமையில் நடைபெற்ற இந்த யோகாசனத்தில் சூரிய நமஸ்காரம் , கைப்பயிற்சி , கண் பயிற்சி , மூச்சு பயிற்சி உள்ளிட்ட 30 க்கும் யோகாசனங்களை செய்து காட்டினார். முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் SKM மயிலானந்தம் , 2015 ஆம் ஆண்டு இந்திய பிரதமர் மோடியுடன் முயற்சியால் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

யோகா சிரம்ம் என பலர் நினைத்த நிலையில் வேதாத்திரி மகரிஷி எளிமைப்படுத்தி கற்றுக் கொடுக்க வழிவகை செய்தார் . 20 நாடுகளில் பலருக்கு உலக சமுதாய சேவா சங்கத்தின் சார்பில் கற்று தரப்படுவதாகவும் தெரிவித்தார் . இந்த நிகழ்ச்சியில் முதலியார் கல்வி நிறுவனங்களின் தலைவர் ராஜமாணிக்கம் , செயலாளர் கே.கே.பாலுசாமி , உலக சமுதாய சேவா சங்க ஈரோடு மண்டல தலைவர் வெங்கடாசலம் , ஈரோடு மனவளக்கலை மன்ற பேராசிரியர் தமிழரசி ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News