சர்வதேச யோகா தினம், மாணவர்கள் கடைபிடிப்பு
சர்வதேச யோகா தினம், மாணவர்கள் கடைபிடிப்பு;
Update: 2024-06-21 05:02 GMT
சர்வதேச யோகா தினம்
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூர் கிரீன் பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளில் சர்வதேச யோகா தினம் கடை பிடிக்கப்பட்டது. பள்ளியின் யோகா ஆசிரியர் சிறப்பு பயிற்சிகளை மாணவர்களுக்கு கற்பித்தார். மாணவர்கள் அமர்ந்தும், நின்றும், குனிந்தும் யோகா சிறப்பு ஆசனங்களை செய்தனர். இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் சுவதிகா பள்ளி முதல்வர் வசந்த ராஜா மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர். நிறைவாக மாணவர்களுக்கு யோகா பயிற்சி புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.