அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் பேட்டி
விருதுநகர் மக்களவை தொகுதியில் மாணிக்கம் தாகூர் பெற்ற வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி, முதல்வர் மு க ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.
அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வகிக்கும் இந்தியா கூட்டணியை சார்ந்த மாணிக்கம் தாகூர் மிகப்பெரிய வெற்றியை பெற்று இருப்பதாகவும் இந்த வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மட்டும் அல்ல முதல்வர் மு க ஸ்டாலின் மூன்று ஆண்டு காலம் செய்த பணிக்கு கிடைத்த மக்களின் அங்கீகாரம் தான் 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி மிகப்பெரிய வெற்றியை திமுக பெற்றிருப்பதாகவும் அதற்கு முதல்வர் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்திருப்பதாகவும் தாங்களும் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் வாக்கு வித்தியாசம் என்பது அந்த தொகுதியில் உள்ள வேட்பாளரை பொருத்தும் தொகுதியை பொறுத்து அமையும் மாணிக்க தாகூர் பெற்ற வெற்றி இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி மு க ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் மீண்டும் மாணிக்க தாகூர் தங்களுக்காக பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் பேட்டி