திருப்பூரில் ஐஎன்டியூசி சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் அமீர்கான் பேட்டி.
திருப்பூரில் ஐஎன்டியூசி சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் அமீர்கான் பேட்டி.
By : King 24x7 Website
Update: 2023-12-22 11:26 GMT
திருப்பூரிலிரிந்து, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் கவுன்சிலர் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டீ சர்ட், முட்டை சமையல் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொருட்களை திருநெல்வேலிக்கு அனுப்பி வைத்தார். திருப்பூரிலிருந்து, பெருந்துறை சிறப்பு நிலை பேரூராட்சி இரண்டாவது வார்டு பெண் கவுன்சிலர் பஷீரியாபேகம் மழையால் பாதிப்படைந்த திருநெல்வேலி பகுதிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். முட்டை, பிரட், நாப்கின், குடிநீர், டீ சர்ட்கள், தக்காளி, வெங்காயம், சேமியா உள்ளிட்ட சமையல் பொருட்கள் என ஐந்து லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை லாரியில் அனுப்பி வைத்தார். இந்த லாரியை காங்கிரஸ் கட்சி மாநில, மாவட்ட நிர்வாகிகள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர். சமையல் பொருட்கள் தொகுப்புடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு சமைக்கும் வகையிலான சமையல் பொருட்கள் உள்ளிட்டவற்றையும் அனுப்பி வைத்தனர்.