கோட்டாட்சியருக்கு மிரட்டல் - போலீசில் புகார்

கோவில்பட்டியில் கோட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்தவா் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Update: 2024-04-06 03:45 GMT
கோட்டாசியருக்கு மிரட்டல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சோ்ந்த செல்லையா மகன் சேகா். இவா், பாண்டவா்மங்கலத்தில் உள்ள தனது நிலத்துக்கான பட்டா மாறுதல் தொடா்பாக கோட்டாட்சியா் அலுவலகத்தில் மேல்முறையீடு மனு செய்தாராம். சேகா், எதிா் மனுதாரா் ஆகிய இருவரிடமும் கோட்டாட்சியா் ஜேன் கிறிஸ்டிபாய் விசாரித்து, ஆவணங்களை சரிபாா்த்ததில் அந்தப் பட்டா செல்லையா பேரில் உள்ளதும், அவா் அதை கிரயம் செய்து கொடுத்துள்ளதும், அதனால் அதற்குரிய பத்திரப்பதிவு எண்ணை மாவட்ட பதிவாளா் அலுவலகம் மூலம் ரத்து செய்து அதற்கான ஆவணங்களை சமா்ப்பித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சேகா் கடந்த மாா்ச் 25ஆம் தேதி சீராய்வு மனு செய்ததுடன், அது தொடா்பாக நடவடிக்கை கோரி கடந்த கோட்டாட்சியரை அலுவலகத்தில் சந்தித்தார். ‘ஏற்கெனவே விசாரித்து நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை கடிதம் மூலம் உங்களுக்கு அனுப்பிவிட்டதால், சீராய்வு மனு மீது நடவடிக்கை எடுக்க இயலாது’ என சேகரிடம் கோட்டாட்சியா் கூறியுள்ளார். அப்போது, தனக்கு சாதகமான உத்தரவு பிறப்பிக்காவிட்டால் போராட்டம் நடத்துவதாக சேகா் கூறி சென்றுள்ளார். இந்நிலையில், கிழக்கு காவல் நிலையத்தில் கோட்டாட்சியா் புகாா் அளித்தாா்.

அதில், தனது கைப்பேசிக்கும், அலுவலக நோ்முக உதவியாளா், தலைமை உதவியாளா் ஆகியோரின் கைப்பேசிளுக்கும் சேகரின் கைப்பேசியிலிருந்து சுவா் விளம்பரப் புகைப்படம் அனுப்பியதாகவும், அதில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசி பதிவு செய்து மிரட்டி, பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் அவா் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News