சிவகாசியில் மது போதையிலிருந்த மினி பேருந்து ஓட்டுநர்: போலீசார் அதிரடி

சிவகாசியில் மது போதையிலிருந்த மினி பேருந்து ஓட்டுநருக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்தனர்.

Update: 2024-06-03 14:35 GMT
காவல் நிலையம்

சிவகாசியில் டிரைவர் மது குடித்ததால் மினி பஸ் பறிமுதல் போக்குவரத்து போலீசார் அதிரடி நடவடிக்கை... விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் டிரைவர் மது குடித்து ஓட்டியதால் மினி பஸ்சை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தனர். சிவகாசி டி.எஸ்.பி. சுப்பையா உத்தரவுபடி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் போலீசார் திருத்தங்கல் ரயில்வே ஸ்டேசன் அருகில் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது திருத்தங்கல்லில் இருந்து சுக்ரவார்பட்டி வழியாக எம்.புதுப்பட்டிக்கு செல்லும் மினி பஸ் டிரைவர் காக்கி சட்டை அணியாமல் கலர் சட்டை அணிந்து பஸ்சை ஓட்டி சென்றதை போலீசார் கவனித்தனர்.மினி பஸ்சை நிறுத்தி டிரைவர் சானார்பட்டியை சோ்ந்த சத்தியமூர்த்தியை எச்சாிக்கை செய்தனர்.அப்போது மினி பஸ் டிரைவர் சத்தியமூர்த்தி மது போதையில் இருந்தததை கண்டு போலீசாரும்,பஸ்சில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.உடனடியாக பயணிகள் இறக்கி விடப்பட்டு மினி பஸ் திருத்தங்கல் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் குறித்து மினி பஸ் உரிமையாளருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து மினி பஸ் டிரைவர் சத்தியமூர்த்திக்கு ரூ.10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் டிரைவர் சத்தியமூர்த்தியின் டிரைவிங் லைசன்ஸ்சை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு போலீசாா் பரிந்துரை செய்தனர்.

Tags:    

Similar News