குந்தாணி பாளையம் அருகே போதையில் பயணி பேருந்தில் தவறி விழுந்து காயம்

குந்தாணி பாளையம் அருகே போதையில் பயணித்த அடையாளம் தெரியாத பயணி பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார்.

Update: 2023-12-02 10:41 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 ஈரோடு மாவட்டம் சிவகிரி அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார் வயது 50 இவர் தமிழக அரசு பேருந்தில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதி இரவு 8 மணி அளவில் கரூர் ஈரோடு சாலையில் இவர் பணியாற்றிய பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 55 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் நபர், மது போதையில், ஈரோடு பேருந்து நிலையத்தில் உதயகுமார் பணியாற்றிய பேருந்தில் ஏறி உள்ளார். மேலும் மதுரை செல்வதற்காக அவரிடம் டிக்கெட் பெற்றுள்ளார்.

இந்த பேருந்து கரூர் ஈரோடு சாலையில் குந்தாணி பாளையம் பிரிவு அருகே வந்த போது உதயகுமாரிடம், அடையாளம் தெரியாத மது போதையில் இருந்த நபர் சிறுநீர் கழிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் பேருந்தை நிறுத்த உதயகுமார் டிரைவருக்கு சிக்னல் அளித்தார். டிரைவர் பேருந்தை நிறுத்தினார். அடையாளம் தெரியாத அந்த நபர் வேகமாக பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் மற்ற பயணிகளை உதவிக்கு அழைத்து அந்த நபருக்கு உதவினர். மேலும், இது குறித்து வேலாயுதம்பாளையம் காவல்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், தலையில் அடிபட்ட அந்த நபரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக, வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.

Tags:    

Similar News