நில அளவீடுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் 

நில உரிமையாளர்கள் தங்கள் நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகம் செயப்பட்டுள்ளது .நிலங்களை அளவீடு செய்யும் வழிமுறைகள் குறித்து ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-05 08:10 GMT

மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் 

நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய, சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் அனைத்து https:// tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 20.11.2023 அன்று தொடங்கி வைத்தார்.  இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நில அளவை செய்ய மற்றும் நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த, வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணையவழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது அலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை மனுதாரர் https://eservisestn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News