இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியல் திறப்பு
சாத்தூர் அருகே பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உண்டியலில் ரூ.44.26 லட்சம் ரொக்கம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்து.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஒவ்வொரு மாதமும் உண்டியல் திறக்கப்படுவது வழக்கம். இதையடுத்து இம்மாதமும் இன்று கோவிலில் உள்ள 11 நிரந்தர உண்டியல் மற்றும் 3 தற்காலிக உண்டியல் மற்றும் கோசாலை உண்டியல் 1 என மொத்தம் 15 உண்டியல்கள் எண்ணப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையரின் நேர்முக உதவியாளரும் செயல் அலுவலர் நாராயனண் உதவி ஆணையரும் செயல் அலுவலருமான சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் மற்றும் கோவில் அறங்காவலர்கள் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூசாரி ஆகியோர் தலைமையில் காணிக்கை உண்டியல் திறக்கப்பட்டு பொருட்கள் மற்றும் பணம் எண்ணப்பட்டன. மேலும் கோவிலில் மண்டபத்தில் வைத்து உண்டியல் எண்ணபட்டதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.44,26,022/- (ரூபாய் மட்டும்) ரொக்கமும் 135 கிராம் பலமாற்று பொன் இனங்களும், 944 கிராம் பல மாற்று வெள்ளி இனங்களும் கிடைக்கப்பெற்றது. மேலும் காணிக்கை எண்ணும் பணியில் மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் கோவில் ஊழியர்கள் என 600 க்கும் மேற்பட்டோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.