மாசி மகத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இருளர்கள்

மாசி மகத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இருளர்கள்

Update: 2024-02-23 07:24 GMT
மாசி மகத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இருளர்கள்
தமிழக வடமாவட்ட பகுதிகளில், இருளர்கள் அதிகம் வசிக்கின்றனர். வாழ்வாதாரத்திற்கு மரம் வெட்டுவது, அரிசி ஆலை, செங்கல் சூளை உள்ளிட்டவற்றில் கூலி வேலை செய்கின்றனர்.அவர்களின் குலதெய்வம் கன்னியம்மன். வங்க கடலில் கன்னியம்மன் வீற்றுள்ளதாக கருதும் அவர்கள், ஆண்டுதோறும் மாசி மக உற்சவத்தின்போது, பல்லாயிரம் இருளர்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என மாமல்லபுரத்தில் கூடி, கடற்கரையில் சில நாட்கள் தங்குகின்றனர். மாசிமக நாளன்று காலை கடலில் நீராடி, கன்னியம்மனை வழிபட்டு, நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். அவ்வாறு அவர்கள் முகாமிடும்போது கடற்கரை மற்றும் பிற இடங்களில் தேவைக்கேற்ப போதிய அளவில் குடிநீர் கழிப்பறை வசதிகள் இன்றி பரிதவிக்கின்றனர். மேலும், அவரவர் ஊர் திரும்பத் தேவையான கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாமலும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, வரும் 24ம் தேதி மாசி மக உற்சவ நாள் என்பதால், சில நாட்களுக்கு முன்னதாகவே பல்லாயிரம் இருளர்கள் கூடுவர். அவர்களின் தேவைக்காக, பேரூராட்சி நிர்வாகம், குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தவும், கூடுதல் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
Tags:    

Similar News