ஆர்.கே நகர் இடைத்தேர்தலை புறக்கணித்த திமுக அழிந்து போய்விட்டதா?

புதுக்கோட்டை ,ஆர் கே நகர் இடைத்தேர்தலை புறக்கணித்த திமுக அழிந்து போய்விட்டதா?- அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி!

Update: 2024-06-18 11:01 GMT

முன்னாள் அமைச்சர் 

தோல்லி பயத்தால் தான் தேர்தலில் அனைத்திந்திய அண்ணாதிராவிட போட்டியிடவில்லை என்று  அதிமுகவை  பின்னடைவை  ஏற்படுத்துவதைக் கங்கணம் கட்டி கொள்கையாக கொண்டு பேசுவதை, ஒரு நாளும் அண்ணா திராவிட முன்னேற்ற கழக விசுவாச தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

புதுக்கோட்டை ,ஆர் கே நகர் இடைத்தேர்தலை புறக்கணித்த திமுக அழிந்து போய்விட்டதா?. டிடிவி தினகரன் ஆர் எஸ் பாரதிக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி இன்றைக்கு முக்கியமாக விவாதிக்கப்படுகின்ற ஒரு பொருளாக நடைபெறுகிற விக்கிரவாண்டி தேர்தலிலே,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிலைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி இன்றைக்கு சூழ்ச்சி மூலமாக சூது மூலமாக பல்வேறு அவதூறு கருத்துக்களை வெளியிட்டு வருவதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் தெளிவாக விளக்கத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

இருந்தபோதிலும் கூட தொடர்ந்து அவதூறு கருத்துக்களை முன்வைப்பதில் அதன் மூலமாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என்பதிலே கண்ணும் கருத்துமாக, கொள்கையாக, லட்சியமாக கொண்ட சிலபேர்கள் இன்றைக்கு அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய நிலைப்பாட்டை பல்வேறு வகையில் அவதூறுகளை தெரிவிப்பதை அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  தோல்வி காணாத மனிதன் முழு மனிதனாக ஆக முடியாது.

என பேரறிஞர் அரிஸ்டாட்டில் கூறியதை இங்கே நினைவு கூர்ந்து தோல்வி காணாத இயக்கம் முழு இயக்கமாக பரிணாம வளர்ச்சி பெற முடியாது என்பதையும் நாம் இதோடு ஒப்பிட்டு பார்க்கலாம்.  தோல்லி பயத்தால் தான் தேர்தலில் அனைத்திந்திய அண்ணாதிராவிட போட்டியிடவில்லை என்று  தென் தமிழகத்தில் திருமண விழாவில் பங்கேற்று பேசி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துவதைக் கங்கணம் கட்டி கொள்கையாக கொண்டு பேசுவதை, ஒரு நாளும்,

அண்ணா திராவிட முன்னேற்ற கழக விசுவாச தொண்டர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.   உச்சபட்ச உரளாக சிலர் பேசும்போது,  நெஞ்சு பொறுக்கவில்லையே இந்த நிலைகெட்ட மனிதர்களை நினைக்கின்ற போது என்ற நிலை தான் இன்றைக்கு அனைத்திந்திய அண்ணாதிராவிட தொண்டர்களுடைய நிலையாக இருக்கிறது.  

ஆகவே இரட்டை இலை தவறானவர்கள் கையில் இருக்கிறது என்று தொடர்ந்து விமர்சித்து வருகிற சிலர் இன்றைக்கு முகவரி இழந்து ,அடையாளம் இழந்து, அங்கீகாரம், இழந்து அனைத்தையும் இழந்து அடைக்கலம் புகுந்திருக்கிற இடத்திற்கு விசுவாசத்தை காட்டுவதற்காக அவர் தொடர்ந்து அவதூறுகளை பரப்பி விடுகிறார்கள். இரட்டை இலை சின்னம் தவறான ஒரு கையில் அல்ல விசுவாச தொண்டன்  கையில் தொடர்ந்து உள்ளது என்பதை நினைவுபடுத்துகிறேன்.

அதிமுக பல ஆண்டுகளாக பல தேர்தலை சந்தித்து இருக்கிறது, புரட்சித்தலைவர்  காலத்திலே தொடர்ந்து கோட்டையின் பக்கமே கருணாநிதி அவர்களை எட்டிப் பார்க்க முடியாத வகையிலே தொடர் வெற்றியை பெற்ற புரட்சித்தலைவர். தலைமையில் கூட நாடாளுமன்றத்தில் எதிர்பார்த்த வெற்றி பெறாமல் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்த காலம் உண்டு என்று இது அண்ணா திமுக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.   புரட்சித்தலைவி அம்மா ஆளுங்கட்சியாக இருக்கும் பொழுது 2004 ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் ஒரு கோடி வாக்குகளை பெற்றிருக்கிறோம்., திமுக ஒரு கோடி 64 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கிறது.

திமுக 57 சதவீதமும் அதிமுக 34 சதவீதமும் அந்த ஒப்பீட்டை நாம் பார்க்கிறோம். அதனை தொடர்ந்து 2011 நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி கட்டிலில் அம்மா  அமர்ந்தார்கள்.  திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாத ஒரு நிலையை மக்கள் ஏற்படுத்தினார்கள்.

ஏதோ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் இந்த இடைத்தேர்தலை புறக்கணிக்குவது போல தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். புதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டு அது முரசொலி வெளியானது  அதற்குப் பின்பு திமுக அழிந்து போய்விட்டதா? காணாமல் போய்விட்டதா?  சூழ்நிலைக்கு ஏற்றவாறு அந்தக் கட்சியினுடைய நிலைப்பாட்டை அறிவிப்பது என்பது கட்சி தலைவர்களின்  ராஜதந்திரம் என்பதை இந்த தமிழ்நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.  அதன் பின் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடாதது ஏன் என  கலைஞர் விளக்கம் அளித்த  செய்தியும் நாம் இங்கே நினைவு கூறுகிறேன்  அதேபோன்று  ஆர்கே நகரில் திராவிட முன்னேற்றக் கழகம் டெபாசிட் இழந்திருப்பதையும் நினைவுகூறுகிறேன்.

 ஏதோ ஒரு இடைத்தேர்தலிலே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான் முதன்முதலாக தமிழக அரசியல் வரலாற்றிலே இந்திய அரசியல் வரலாற்றிலே புறக்கணித்து இருப்பதை போல, அவர் அவர்கள் கற்பனை செய்திகளை கதைகளை, கட்டுரைகளை,கவிதைகளை  இப்படி அவதூறுகளை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது இது மக்களுக்கு செய்கிற சேவை அல்ல இது மக்களை குழப்புகிற வேலை. சுதந்திரமாக நியாயமாக இந்த தேர்தல் நடைபெறாது என்று மக்களுக்கு எடுத்துச் சொல்லியுள்ளோம்.  2009 கோடநாட்டில் அம்மா ஆலோசனைக் கூட்டம் நடத்தி நிர்வாகிகளிடம் கலந்துபேசி 5 சட்டமன்ற தேர்தலில் நாம் புறக்கணித்தார்.

அதற்குப் பிறகு மாபெரும் வெற்றி பெற்றோம் இது தமிழ்நாட்டு மக்கள் கொடுத்திருக்கிற தீர்ப்பு  ஆகவே அதேபோலத்தான் இன்றைக்கும் எடப்பாடியார்  மூத்த நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை செய்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிர்காலத்திற்கு எது நல்லது தொண்டர்களுக்கு எது நல்லது தமிழ்நாட்டுக்கு எது நல்லது என்ற அடிப்படையிலே தான் இன்றைக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கூடிய நிலைப்பாட்டை அறிவித்துள்ளார்  இந்த ஒரு தேர்தல் உடைய வெற்றி தோல்வியிலே தமிழ்நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படாது. 

 அதே நாள் கடந்த கால வரலாற்றை பார்க்கின்றபோது ஆளும் கட்சிக்குதான் இடைத்தேர்தல் என்பது சாதகமாக அமையக்கூடிய ஒரு சூழ்நிலையிலே அவர்களுடைய அதிகாரபலம், ஆளாவலம்,படை பலம் அனைத்தும் அவர்களுடைய அதிகாரம் துஷ்பிரயோகம் இவை எல்லாம் நாம் பார்த்து பார்த்து சலித்து போன ஒன்று.  எடப்பாடியார் ஒரு தொலைநோக்கு சிந்தனையோடு 2026 இலக்காக வைத்து,  அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் மலர செய்வதற்கான தொலைநோக்கு திட்டத்தின் உடைய நிலைப்பாடு தான்.  

இன்றைய தேர்தல் புறக்கணிப்பு இது ஒன்றும் தேச விரோதம் இல்ல ஆகவே இதுநாள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு பின்னடைவு என்றோ? இதனால் இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வெற்றியை காண முடியாது என்றோ? யாரேனும் மனப்பால் குடித்தால் அது அவர்களுக்கு நிச்சயமாக தோல்வியில் தான் போய் முடியும்.  புரட்சிதலைவர்,புரட்சித்தலைவி  அம்மா வளர்த்த இயக்கத்தை இன்றைக்கு எடப்பாடியாரால் காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ள இந்த இயக்கத்தை ஒரு நாளும் ஒரு பொழுதும் தமிழ்நாட்டு மக்கள் கைவிட மாட்டார்கள். 

  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 52 ஆண்டுகள் இந்த தாய் தமிழ்நாட்டிலே சேவை செய்திருக்கிறது என்பதை  மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள் அதை அனுபவித்திருக்கிறார்கள் அதை புரிந்து இருக்கிறார்கள்.  ஆகவே தமிழ்நாடு மக்களுடைய நெஞ்சங்களில் இருந்தும் தமிழ்நாட்டு மக்களுடைய செல்வாக்குகள் இருந்தும் அப்புறப்படுத்த எத்தனை முயற்சிகளை செய்தாலும் சூழ்ச்சிகள் அவதூறு செய்பவர்கள் ஒருபோதும் எடுபடாது.  

இன்றைக்கு முகவரி தேடுபவர்கள், அடையாளத்தை அடைவதற்கு அலைந்து கொண்டிருப்பவர்களால் அதிமுக மீது சேற்றை வாரி, அவதூறை பரப்புவதால் ஒரு சதவீதம் கூட பின்னடைவை ஏற்படுத்த முடியாது   இத்தனை சக்திகளை எதிர்த்து போராடி  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தொண்டர்கள் இயக்கமாக மக்கள் உருவாக்கியுள்ளார் திமுகவை மன உறுதியோடு எதிர்த்து வருகிறார்.

மின் கட்டண உயர்வு ,சொத்து வரி உயர்வு  மற்றும் போதைப்பொருள் கலாச்சாரத்தை எதிர்த்து மன உறுதியோடு ,துணிச்சலோடு களத்தில் நின்று திராவிட முன்னேற்றக் கழகத்தை எடப்பாடியார் எதிர்த்து இரண்டு கோடி தொண்டர்களையும் போராட வைத்தவர் எங்களை எதிர்த்து அவதூறு பரப்புபவர்கள் திமுகவை எதிர்த்து  ஏதாவது ஒரு போராட்டத்தை முன்னெடுத்து நடத்தி இருக்கிறார்கள்? ஆகவே தமிழ்நாடு மக்களுக்கு எல்லாம் தெரியும் எல்லாம் அறிந்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள் எங்கள் மீது அவதூறு பரப்பவர்களை ஏற்றுக் கொள்வதுமில்லை ஏனென்றால்,

     இன்றைக்கு குருதி சிந்தியாவது எங்கள் குலக்கொழுந்தாக இருக்கிற எங்கள் குலம் காக்கிற தமிழர்களின் குலம் காக்கிற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை குருதி சிந்தி காக்க கழகத்தின்2 கோடி தொண்டர்கள்    சாமானிய தொண்டனாக இருந்து இன்றைக்கு இயக்கத்தை வழி நடத்தி வருகிற எடப்பாடியாரின் வழி நடப்போம்.  எத்தனை சூறாவளிகள் புறப்பட்டு வந்தாலும் அதை தூள் தூளாக்கி  வலிமையோடு போராடி வெற்றி காண்போம்  என கூறினார்.

Tags:    

Similar News