பொங்கல் பரிசுத்தொகுப்பில் குறைபாடா? புகார் சொல்லலாம்

பொங்கல் பரிசுத்தொகுப்பில் குறைபாடு இருந்தால் புகார் அளிக்கலாம் என திருவண்ணாமலை கலெக்டர் அறிவித்துள்ளார்.

Update: 2024-01-09 07:55 GMT

பொங்கல் பரிசுத்தொகுப்பில் குறைபாடா? கலெக்டர் ஆபீசுக்கு புகார் சொல்லலாம் திருவண்ணாமலை ஆட்சியர் அறிவிப்பு. திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதில் குறைபாடுகள் இருந்தால் கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அல்லது வட்ட அளவில் அதிகாரிகளி டம் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தகுதியான அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீள கரும்பு, இலவச வேட்டி, சேலை மற்றும் ரொக்கம் ரூ.ஆயிரம் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தகுதி யான ரேஷன் கார்டுதாரர்கள் அனைவருக்கும் சம்மந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் அரசு ஊழியர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் மற்றும் பொருள் இல்ல அட்டைதாரர்கள் தவிர்த்து ஏனைய 5 குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

வரும் 10ம் தேதி முதல் ஜனவரி 13ம் தேதி வரை சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை மூலம் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் பொங்கல் பரிசுத்தொகுப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறை எண் 04175-233063 என்ற என் ணிற்கோ அல்லது திருவண்ணா மை மாவட்ட ஆட்சியர் பா முருகேஷ் 9445000420, ஆரணி ஆர்டிஓ தனலட்சுமி 8072912122 செய்யார் சப் கலெக்டர் பல்லவிவர்மா 9445000419 எண்ணிலோ, வட்ட அளவிலான அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News