ரயிலிருந்து தவறி விழுந்தவரின் கை, கால்கள் துண்டான பரிதாபம்
ஜோலார்பேட்டை அருகே ரயிலில் தவறி விழுந்த தனியார் நிறுவன ஊழியர் ரயிலின் சக்கரத்தில் சிக்கியதில் அவரது கை, கால்கள் துண்டானது. படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
Update: 2024-01-25 07:04 GMT
கார்த்திக்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே ரயில் நிலையம் அருகே கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரை சேர்ந்தவர் ராஜா இவரது மகன் கார்த்திக்(21). இவர் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சென்னையில் இருந்து கோயம்புத்துார் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். இந்த நிலையில் 9 மணி அளவில் ரயில் ஜோலார்பேட்டை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் படியில் நின்று பயணம் செய்த கார்த்திக் எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்து அதே ரயில் சக்கரத்தில் சிக்கிக்கொண்டார். இதில் அவருக்கு இரு கால்கள், ஒரு கை துண்டானது. தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் அங்கு சென்று ரயிலில் அடிபட்டு படுகாயம் அடைந்த கார்த்திக்கை மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.