கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில்தான் துறையூர் வளர்ச்சி அடைந்தது: அமைச்சர்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமாள் மலை அடிவாரத்தில் திமுக வேட்பாளர் அருண்நேருவை ஆதரித்து அமைச்சர் கே. என். நேரு வாக்கு சேகரித்தார்.

Update: 2024-03-30 08:42 GMT

மகனுக்கு வாக்கு சேகரித்த அமைச்சர்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருமாள் மலை அடிவாரத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரத்தை தொடங்கி வாக்குகள் சேகரித்து வருகிறார்.

அப்போது திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து அமைச்சர் கே. என். நேரு பேசியதாவது 91 ஆம் ஆண்டிலிருந்து துறையூர் பகுதி பாதகமான பகுதி. சட்டமன்ற உறுப்பினர் முயற்சியால் ரூ. 12 கோடி மதிப்பில் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் புறவழிச் சாலை வந்தது, துறையூர் வளர்ச்சி அடைந்தது. ஸ்டாலின் ஆட்சி காலத்தில் பெருமாள் மலை புறவழிச்சாலை தொடங்கப்பட்டது. புறவழிச்சாலை அமைந்தால் தான் துறையூர் வளர்ச்சி அடையும்.துறையூர் பகுதி மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் ரூ.100 கோடி மதிப்பில் புதிய கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அது இன்னும் ஓரிரு மாதங்களில் பணிகள் முடிவடைந்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். நீண்ட காலமாக சாலை வசதி இல்லாத பச்சமலைக்கு நமது ஆட்சி காலத்தில் ரூ.13 கோடி மதிப்பில் புதிய சாலை வசதி கொண்டுவரப்பட்டது.

புளியஞ்சோலையில் கிணறுகள் வெட்டி உப்பிலியபுரம் பகுதியில் குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு குடிநீர் வசதி செய்து தரும் திட்டம் தொடங்கியிருக்குறோம்.துறையூர் பகுதிக்கு புதிய அரசு கல்லூரி முதல்வர் தர உள்ளார் என பேசி பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேருவிற்க்கு வாக்குகள் சேகரித்தார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News