ஜெ., பிறந்தநாள் - அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பள்ளிபாளையத்தில் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் 76 வது பிறந்த நாள் விழாவை ஒட்டி அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-02-25 14:57 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளிலும், முன்னாள் முதல்வரும் அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின்  76 வது பிறந்த நாளை ஒட்டி, கோலப்போட்டி நடைபெற்றது. மேலும் 21 வார்டுகளிலும் கொடி ஏற்றுதல் விழா நிகழ்வில் முன்னாள் மின்துறை அமைச்சரும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி  கலந்து கொண்டு, கொடியினை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். மேலும் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு பால், பிரட் ,பன், பெட்ஷீட் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்வின் பொழுது பள்ளிபாளையம் நகர அதிமுக செயலாளர் பி.எஸ்.வெள்ளிங்கிரி ,அதிமுக ஒன்றிய செயலாளர் சேர்மன் செந்தில், பள்ளிபாளையம் நகர அதிமுக துணை செயலாளர் ஜெய்கணேஷ், அம்மா பேரவை செயலாளர் டி கே சுப்பிரமணி, மற்றும் முன்னணி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் திரளானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்..
Tags:    

Similar News