ஜெ.,பிறந்தநாள் - அதிமுக சார்பில் நலதிட்ட உதவி

தூத்துக்குடியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-02-27 02:45 GMT

நலதிட்ட உதவிகள் வழங்கல்

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெ- யின் 76 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகே நடைபெற்ற பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தூத்துக்குடி மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன் தலைமை தாங்கினார். பகுதிச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், நட்டார் முத்து, மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, முன்னாள் கவுன்சிலர் சுடலை மணி, எஸ்.கே. மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா. சுதாகர் வரவேற்று பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் 1076 பேர் பயன்பெறும் வகையில் பெண்களுக்கு தையல் மிஷின்கள், மிக்ஸி, சலவைத் தொழிலாளிக்கு இஸ்திரி பெட்டி, மின்சார அயன் பாக்ஸ், சில்வர் குடம், ஊனமுற்றவருக்கு மூன்று சக்கர சைக்கிள், வேஷ்டி சேலை என ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் பேசினார்.

அதிமுக அறிவிப்பின்படி பங்கேற்ற அதிமுக செய்தி தொடர்பாளரும் மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான முன்னாள் எம்எல்ஏ பாபு முருகவேல் முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் மக்கள் விரோத போக்கையும் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்த திமுக செய்யும் சூழ்ச்சிகளையும் தெளிவாக எடுத்துரைத்து பேசினார்.

கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் என். சின்னத்துரை, தலைமைக் கழகப் பேச்சாளர் இசையமுரசு ராமகிருஷ்ணன், மாவட்ட அவைத் தலைவர் வக்கீல் திருப்பாற்கடல், மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் பெருமாள் சாமி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் இரா. ஹென்றி, மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் வக்கீல் பிரபு, மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் நடராஜன், டேக் ராஜா, பில்லா விக்னேஷ், கே.ஜே. பிரபாகர், அருண் ஜெபக்குமார், சுதர்சன் ராஜா, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி திருச்சிற்றம்பலம், முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ருமணி,உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேற்கு பகுதி ஐடி விங் செயலாளரும் வட்டச் செயலாளருமான தூத்துக்குடி மணிகண்டன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News