ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலைமறியல்
அரியலூரில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
Update: 2024-02-01 08:41 GMT
ஜாக்டோ- ஜியோ அமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலையருகே மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும் எனவும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தபட்டது. மேலும் சரண்டர் உள்ளிட்ட நிலுவை கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனையடுத்து அந்த வழியே வந்த அரசு பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.