2024 கிலோ ஐஸ் கட்டிகளில் ஜெய் ஸ்ரீ ராம்

தேனியில் 2024 கிலோ ஐஸ் கட்டிகளை உருக்கி ஜெய் ஸ்ரீ ராம்" (JAISHREERAM) என்று எழுத்து வடிவத்தில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் குறித்து பாஜகவினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Update: 2024-01-22 08:08 GMT

பனிக்கட்டியில் ஜெய் ஸ்ரீராம் 

உத்திரப்பிரதேச மாநிலம் அயோதியில்  ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் சார்பில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தேனி பாஜக சார்பில் தேனி அருகே அரண்மனைபுதூரில் உள்ள வேதபுரி ஆசிரமத்தின் முன்பு ஐஸ் கட்டிகளை உருக்கி "ஜெய் ஸ்ரீ ராம்" (JAISHREERAM) என்ற 11 வார்த்தைகள் அடங்கிய வாசகங்களை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் 2000 கிலோ கொண்ட ஐஸ் கட்டிகளை இரண்டு மணி நேரமாக உருக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று எழுத்து வடிவில் வாசகத்தை உருவாக்கினர் ஐஸ் கட்டிகளை ஒவ்வொரு வார்த்தைகளாக உருக்கி ஜெய் ஸ்ரீ ராம் என்று வாசகத்தை உருவாக்கி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் ஐஸ் கட்டிகளில் ஜெய்ஸ்ரீராம் என்று உருவாக்கப்பட்டதை பொதுமக்கள் அதன் முன் நின்று செல்பி எடுத்தும் சென்றனர்.
Tags:    

Similar News