மண்டையூரில் ஜல்லிக்கட்டு - திமுகவினர் வாக்குவாதத்தால் கால தாமதம்

மண்டையூர் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் வந்து தான் துவக்கி வைக்க வேண்டும் என விழா கமிட்டியினருடன் திமுக மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போட்டி காலதாமதமாக துவக்கியது.

Update: 2024-01-19 08:02 GMT

புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்க இருந்த சூழலில் கோயில் காளை அவிழ்க்கப்பட்டு வீரர்கள் உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர். இந்த விழாவிற்கு முன்னாள் அமைச்சரும் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர் பங்கேற்ற சூழலில் திமுக அமைச்சர் வந்து தான் போட்டியை தொடங்க வேண்டுமென திமுக மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் விழாக்கமிட்டியிடையே இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போட்டி ஒன்றரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

இந்த ஆண்டு முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி மண்டையூர் கிராமத்தில் இன்று நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இன்று காலை 8 மணிக்கு நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு போட்டியானது மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் செய்த பிரச்சனை காரணமாக போட்டி ஒன்றரை மணி நேரம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து இன்று ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்பதற்காக வந்த ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் வீரர்கள் குழப்பத்தில் மைதானத்திலேயே அமர்ந்திருந்தனர். தற்போது ஜல்லிக்கட்டு போட்டிக்குள் அரசியல் கொண்டுவரக் கூடாது என்று ஜல்லிக்கட்டு வீரர்கள் மத்தியில் கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது போட்டியானது தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News