கும்பகோணத்தில் ஜமாபந்தி

கும்பகோணத்தில் ஜமாபந்தி நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-06-15 08:54 GMT

மனு அளித்த மக்கள்

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தஞ்சாவூர் மாவட்ட தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி என அழைக்கப்படும் வருவாய் தீர்வாய கணக்கு தணிக்கையில்,

நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க.அன்பழகன் அவர்கள் கலந்து கொண்டு, கும்பகோணம் தொகுதி மக்கள், கோரிக்கை விடுத்த தமிழ்நாடு அரசின் இலவச வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து, உடனடியாக தீர்வு கண்ட 2 பேருக்கு, வீட்டுமனை பட்டாவை பயனாளிகளுக்கு வழங்கினார்கள். நிகழ்வில், கும்பகோணம் வட்டாட்சியர் பி.வெங்கடேசன் அவர்கள், கும்பகோணம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெ.சுதாகர் அவர்கள் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News