பாபநாசத்தில் ஜமாபந்தி - மனுக்கள் அளித்த பொதுமக்கள்

பாபநாசம் சரக கிராமங்களுக்கான ஜமாபந்தி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தலைமையில் நடைபெற்றது.;

Update: 2024-06-19 06:22 GMT

 ஜமாபந்தி 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் பாபநாசம் சரக கிராமங்களான பாபநாசம், கோபுராஜபுரம் ,திருப்பாலைதுறை, அரையபுரம். தட்டுமால் படுகை, ராஜகிரி பண்டாரவாடை, ரெகுநாதபுரம், சரபோஜிராஜபுரம், பொன்மான், மேய்ந்தநல்லூர், மேல செம்மங்குடி, தேவராயன் பேட்டை, புலி மங்கலம், திருவையாத்துகுடி ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுதாராணி தலைமையில் நடைபெற்றது.

Advertisement

அது சமயம் பொதுமக்களிடமிருந்து 181 மனுக்கள் பெறப்பட்டது பெறப்பட்ட மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுத்த ஜமாபந்தி அலுவலர் அறிவுறுத்தினார் முகாமில் பாபநாசம் வட்டாட்சியர் மணிகண்டன் துணை வட்டாட்சியர்கள் பிரபு பிரியா தமயந்தி அன்புக்கரசி சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் முருககுமார் வட்ட வழங்கல் அலுவலர் அருணகிரி வட்ட சார் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வருவாய் ஆய்வாளர் சுந்தரேசன் தலைமை எழுத்தர் செல்வராணி தமிழ்நாடு கிராம அலுவலர் சங்கத்தின் மாவட்ட இணை செயலாளர் ராஜேஷ் கோட்ட செயலாளர் நீலகண்டன் வட்ட தலைவர் ஆரோக்கிய பவுல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News