பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் 13ஆம் தேதி ஜமாபந்தி

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் 13-ஆம் தேதி ஜமாபந்தி துவங்குகிறது என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-06-09 09:26 GMT

கோப்பு படம் 

பாபநாசம் தாலுக்கா அலுவலகத்தில் 13-ஆம் தேதி ஜமாபந்தி துவங்குகிறது வட்டாட்சியர் தகவல் பாபநாசம் ஜுன்.9 தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருகிற 13.06.2024 வியாழகிழமை முதல் 25.06.2024 செவ்வாய்க்கிழமை வரை,

தஞ்சாவூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் சுதா ராணி தலைமையில் காலை 9 மணி அளவில் துவங்கி நடைபெற உள்ளது அய்யம்பேட்டை சரகத்திற்கு 13-ஆம் தேதியும் கபிஸ்தலம் சரகத்திற்கு 14ஆம் தேதியும் பாபநாசம் சரகத்திற்கு 18ஆம் தேதியும் மெலட்டூர் சரகத்திற்கு 20ஆம்தேதியும் சாலியமங்கலம் சரகத்திற்கு 21 ஆம் தேதியும் அம்மாபேட்டை சரகத்திற்கு 25ஆம் தேதி நடைபெறுகிறது.

அது சமயம் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் நில உடமையாளர்கள் பட்டா மாறுதல் மற்றும் நிலங்கள் குறித்த எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் குறித்தும் பொதுமக்கள் வீட்டுமனை ஒப்படை நில ஒப்படை மற்றும் முதியோர் உதவித்தொகை பெறுதல்,

போன்ற கோரிக்கைகள் குறித்தும் வருவாய் தீர்வாய (ஜமாபந்தி) அலுவலர்களிடம் மனுக்கள் கொடுத்து தீர்வு பெறலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News