இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீர்வாயம் - ஆட்சியர் பங்கேற்பு
இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தீர்வாயம் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா பங்கேற்று மனுக்களை பெற்றார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், இராசிபுரம், கொல்லிமலை, சேந்தமங்கலம், மோகனூர், திருச்செங்கோடு, பரமத்தி-வேலூர், குமாரபாளையம் ஆகிய 8 வருவாய் வட்டங்களிலும், பசலி ஆண்டு 1433-க்கான வருவாய்த் தீர்வாயம் தொடங்கியது. இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற தீர்வாயம் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் உமா கலந்துகொண்டு பொதுமக்களின் மனுக்கள்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசுத்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில், ஒவ்வொரு வருவாய் வட்டத்திலும், கிராம ஊராட்சிகள் வாரியாக நீண்ட நாள் தீர்க்கப்படாமல் உள்ள குறைகள் அவற்றின் மீது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள், அவற்றை உடனடியாக தீர்வுக்கு கொண்டு வருதல் ஆகிய நடவடிக்கைகள் இந்த வருவாய் தீர்வாயத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டன.இதுகுறித்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து தீர்க்கப்படாமல் உள்ள குறைகளை தீர்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உமா, அரசு தறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இராசிபுரம் வட்டத்தில் நாள் ஒன்றுக்கு 7 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றின் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகள் தீர்வு செய்யப்படும். இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் 82 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இராசிபுரம் வருவாய் வட்டாட்சியர் சு. சரவணன், வருவாய் உள்ளிட்ட அனைத்து அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.