ஜவுளிநகர் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி நடத்த விண்ணப்பம் அளிக்கலாம்
ஈரோடு ஜவுளிநகர் பபுதியில் வீடற்ற ஏழைகள் தங்கும் விடுதி நடத்த விண்ணப்பம் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சி தேசிய நகர்புற வாழ்வாதார திட்டத்தின்கீழ் மண்டலம் 1 ஜவுளி நகர் பகுதியில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வீடற்ற ஏழைகள் தங்குமிடத்தினை அதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிகாட்டுதலுக்கிணங்க பணபயன் எதுமின்றி நடத்துவதற்காக அரசு சார்பில்லா தொண்டு நிறுவனங்களின் விண்ணாப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஆர்வமுள்ள தொண்டு நிறுவனங்கள் தங்களது விருப்பத்தினை ஆணையாளர் ஈரோடு மாநகராட்சி, ஈரோடு என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது அலுவலக வேலை நாட்களில், ஈரோடு மாநகராட்சி மைய அலுவலக பொது சுகாதாரப் பிரிவிற்கு நேரடியாகவோ வருகின்ற 19.022024 ஆம் தேதிக்குள் எழுத்து பூர்வமாக தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தொண்டு நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தின் விபரங்கள், இதுவரை சமூக பணியில் ஈடுபட்டுள்ள முன்அனுபவம் மற்றும் சேவை விபரங்கள் ஆகியவற்றை உரிய ஆதாரங்களுடன் எழுத்து பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
தங்களது தொண்டு நிறுவனம் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனம் ஈரோடு மாநகராட்சி ஆணையாளருடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.