ஜெயலலிதா பிறந்தநாள் - ராசிபுரம் ஜி.எச் ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
ஜெயலலிதா பிறந்தநாள் - ராசிபுரம் ஜி.எச் ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்;
By : King 24x7 Website
Update: 2024-02-24 12:36 GMT
ஜெயலலிதா பிறந்தநாள் - ராசிபுரம் ஜி.எச் ல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முழுவதும் அதிமுகவினர் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தலைமை அரசு மருத்துவமனையில் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் பி.தங்கமணி, உத்தரவின் பேரில் நகர கழக துணைச் செயலாளர் ஏ. வாசுதேவன், முன்னிலையில் மாவட்ட கழக அவைத்தலைவர் எஸ். பி. கந்தசாமி தலைமையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக V.T. தமிழ்செல்வன் கலந்து கொண்டு தினேஷ்குமார் - மைனாவதி, சந்தோஷ் - பிரியா ஆகிய தம்பதிகளுக்கு (24.2.24) பிறந்த ஆண் குழந்தைகளுக்கு 1 கிராம் மதிப்பிலான தங்க மோதிரங்களை வழங்கினர். நிகழ்ச்சியில் நகரக் கழக பொருளாளர் எஸ் வெங்கடாஜலம், எஸ் பி மனோகரன், ஆர் பி . சீனிவாசன். ஆர் பி எம் ஜெகன், பி. டி.விஜய், ஸ்ரீரங்கன் ரங்கசாமி ஏடிசி மோகன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் அமல்ராஜ் ,சுந்தரம், தினகரன், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள், மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.