பேராவூரணியில் ஜெயலலிதா நினைவு நாள் அமைதி ஊர்வலம் 

பேராவூரணியில் ஜெயலலிதா நினைவு நாள் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.;

Update: 2023-12-05 16:01 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 7 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சேதுசாலை ஏகா விழா அரங்கில் இருந்து, நூற்றுக்கணக்கான அதிமுகவினர், முன்னாள் எம்எல்ஏவும், தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி.சேகர் தலைமையில், கருப்புப்பட்டை அணிந்து அமைதி ஊர்வலமாகச் சென்று, அண்ணா சிலை அருகில், அமைக்கப்பட்டிருந்த அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த, ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். 

Advertisement

இதில், அதிமுக மாநில விவசாய அணி, இணைச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ மா.கோவிந்தராசு, தஞ்சை தெற்கு மாவட்ட அவைத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. திருஞானசம்பந்தம், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில இணைச் செயலாளர் எஸ்.ஆர்.ஜவஹர்பாபு,  முன்னாள் கயிறு வாரியத் தலைவர் நாடாகாடு நீலகண்டன், ஒன்றியச் செயலாளர் துரை.மாணிக்கம், கோவி.இளங்கோ, கே.எஸ்.அருணாச்சலம், மாநில  ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், நகரச் செயலாளர் நீலகண்டன், மற்றும் ஒன்றிய, நகர அதிமுக அனைத்து பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News