திருவேங்கடத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தில் அதிமுகவினர் சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

Update: 2024-02-25 09:24 GMT

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் காந்தி மண்டபம் முன்பு ஜெயலலிதா 76 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கட்சியின் திருவேங்கடம் மகளிர் அணி செயலாளர் நிர்மலா தேவி தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினார்,

இந்த நிகழ்ச்சிகள் அதிமுக கட்சியின் திருவேங்கடம் துணை நகரச் செயலாளர் பாலமுருகன், வார்டு கழகச் செயலாளர் கணேசன், யோவான், பாலமுருகன், சரவணன், சுதாகர், மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News