இளநீர் குன்றத்தில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
அனக்காவூர் அருகே இளநீர் குன்றத்தில் அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.;
Update: 2024-02-26 02:12 GMT
உணவு வழங்கல்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே அனக்காவூர் ஒன்றியம் இளநீர் குன்றம் பகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் ஓன்றிய செயலாளர்கள் துரை அரங்கநாதன் குணசீலன்,நகர செயலாளர் வெங்கடேசன், ஜனார்த்தனன், தணிகாசலம், இளநீர் குன்றம் பகுதியை சேர்ந்த வடிவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.