நாசரேத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

நாசரேத்தில் எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில்தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

Update: 2024-02-25 13:01 GMT

ஜெயலலிதா பிறந்தநாள் விழா

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் ரயில்வே நிலையம் அருகில் நகர எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 76-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் கராத்தே டென்னிசன் தலைமை வகித்தார்.விழாவை முன்னிட்டு ஜெயலலிதா திருஉருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டன.  இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ஆழ்வார் திருநகரிகிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார், அதிமுக ஆழ்வார்திருநகரி மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ் நாராயணன், அதிமுக மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஞானையா, அதிமுக பிரமுகர் பெரியதுரை, மூன்றாவது வார்டு செயலாளர் சரவணன், 12-வது வார்டு கவுன்சிலர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண் டனர்.
Tags:    

Similar News