ஆதி சங்கரரின் ஜெயந்தி விழா
புதுக்கோட்டையிலுள்ள ஸ்ரீசங்கர மடத்தில், ஆதி சங்கரரின் ஜெயந்தி விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.;
Update: 2024-05-13 07:19 GMT
ஆதி சங்கரர் ஜெயந்தி விழா
புதுக்கோட்டையிலுள்ள ஸ்ரீசங்கர மடத்தில், ஆதி சங்கரரின் ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த மே 8ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை திருவிடைமருதூர் பாடசாலாவின் வித்யார்த்திகள் நடத்திய வேதபாராயணம் நடைபெற்றது. கணபதி ஹோமம், ஆவஹந்தி ஹோமம்,பாராயண பூர்த்தி ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.