ராமநாதபுரத்தில் ஜெல்லி மீன் கடித்ததால் பரபரப்பு

அரியமான் கடற்கரையில் குளித்த 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன்கள் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-06-16 16:11 GMT
ஜெல்லி மீன்கள்

ராமநாதபுரம் அரியமான் கடற்கரையில் அதிகளவில் ஜெல்லி மீன்கள் காணப்படுகின்றன. இதனால், அரியமான் கடற்கரைக்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளதுடன் கடற்கரையில் குளித்த 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன் தாக்கியதில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ குழுவினரால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அடுத்த அரியமான் சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. இதனால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளார்.

பொதுமக்கள் பெரும்பாலானோர் விடுதுறை நாட்களில் குடும்பத்துடன் பொழுதை கழிக்க அரியமான் கடற்கரைக்கு வருகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கடலில் உற்சாக குளித்து மகிழ்வதுடன் கடற்கரை ஓரமுள்ள சவுக்கு காடுகளில் குடும்பத்தினருடன் அமர்த்து உணவு சாப்பிட்டு விடுதுறை நாட்களை கழித்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பக்ரீத் பண்டிகை ஒட்டி தொடர் விடுமுறை மற்றும் அரியமான் கடற்கரையில் கடற்கரை திருவிழா நடைபெற்று வருவதால் தினசரி திரளான சுற்றுலா பயணிகள் அரியமானுக்கு குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இதனிடையே கடலில் தற்போது சொறி மீன்கள் எனப்படும் ஜெல்லி மீன்கள் அதிகளவில் காணப்படுகிறது.

ஒளிரும் தன்மையும், மெல்லிய உடல் அமைப்பும் கொண்ட இந்த மீன்கள் தண்ணீரின் நிறத்தில் காணப்படுகின்றன. பசையும், பற்றி கொள்ளும் தன்மையும் உள்ளதால் மனிதர்களின் உடலில் எளிதில் ஒட்டிக் கொள்கின்றன. விஷத்தன்மை உள்ள இந்த மீன்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பதால் சுற்றுலா பயணிகள் அதனை பிடித்து மகிழ்கின்றனர். அந்த மீன் ஒட்டிக்கொள்ளும் போது, அதில் இருந்து சுரக்கும் விஷத்தன்மை கொண்ட திரவம் உடலில் அரிப்பை ஏற்படுத்துகிறது.

மேலும் ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் இன்று மாலை அரியமான் கடற்கரையில் குளித்த சுமார் 30க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை ஜெல்லி மீன் தாக்கியதில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதுடன், ஒவ்வாமை ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு மருத்துவ குழுவினர்கள் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுதொடர்பாக சுற்றுலா பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எனவே இதுகுறித்து கடற்கரையில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News