வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு - வாலிபர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-01-03 01:23 GMT

கைது 

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள திண்டலானூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்.(48).டிப்பர் லாரி டிரைவர் இவருக்கு திருமணமாகி,வன்னியகொடி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.பெருமாள் வழக்கம்போல்.வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி வன்னியகொடி, குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டை பூட்டிவிட்டு அய்யம்பட்டியில் உள்ள  தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

இந்நிலையில் சில்லாரஅள்ளி,கிராமத்தை சேர்ந்த கருணாகரன் மகன் விஜய் (26) என்பவர் பெருமாள் வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்டு அவரது வீட்டின் பூட்டை உடைத்து புகுந்துள்ளார். பின்னர் அவர் பீரோவை உடைத்து அதில் இருந்து நகையை திருடி சென்றுள்ளார். இதனை அதே பகுதியில் குடியிருக்கும் விக்னேஷ் என்பவர் பார்த்து உடனே பெருமாளுக்கு போனில் தகவல் தெரிவித்தார். உடனே பெருமாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த 3, 1/2 பவுன் செயின் மற்றும் பவுன் தோடு ஆகிய நகையை விஜய் திருடி சென்றது தெரியவந்தது. கடத்தூர் காவல் நிலையத்தில் இதுகுறித்து பெருமாள்.புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயை கைது செய்தனர். அவரிடம்.இருந்து 3 1/2 பவுன் நகையை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.87,500. ஆகும். கைதான விஜயை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News