கண்டக்டர் வீட்டில் நகை கொள்ளை

கள்ளக்குறிச்சி மாவட்டம்,எஸ்பி பாளையம் பகுதியில் பஸ் கண்டக்டர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.;

Update: 2024-02-17 08:15 GMT

நகை கொள்ளை 

சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்ஜோதி, 55; அரசு பஸ் கண்டக்டர். இவர், கடந்த 12ம் தேதி புதுச்சேரியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டிலிருந்த 80 சவரன் நகை மற்றும் 18 லட்சம் ரூபாய் கொள்ளை போனது. இதுகுறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் கொள்ளை கும்பலைப் பிடிக்க எஸ்.பி., (பொறுப்பு) தீபக் சவாச் 4 தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். அதன்படி திருக்கோவிலுார் டி.எஸ்.பி. மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர் வினாயக முருகன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News