நகை கடையில் திருட்டு - சிசிடிவியில் சிக்கிய ஜோடிக்கு வலை
திருவட்டார் அருகே நகை கடை உரிமையாளரை திசை திருப்பி மோதிரத்தை திருடிய ஜோடியை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் பூவன்கோடு சேர்ந்தவர் பரமசிவன்.நகை கடை அதிபர். இவரது கடைக்கு சம்பவத்தன்று இரு சக்கர வாகனத்தில் 25 வயது மதிக்கதக்க ஆணும் பெண்ணும் ஜோடியாக வந்தனர். அவர்கள் 4 கிராம் எடையில் மோதிரம் வேண்டும் கேட்டுள்ளனர்.இதனை தொடர்ந்து கடை உரிமையாளர் பரமசிவன் 4 கிராம், 2-ம் கிராம் எடைகளில் பல மாடல்களில் மோதிரம் காட்டினார். அந்த ஜோடி, 4 கிராம் நகையை வாங்கி கொண்டு பணத்தை செலுத்திச் சென்றனர்.
அதன்பிறகு இரவில் கடையை மூடும் போது, உரிமையாளர் பரமசிவன் அலமாரியில் இருந்த நகைகளை சரி பார்த்தார். அப்போது 2 கிராம் எடை கொண்ட 2 மோதிரங்கள் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பரமசிவன், கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்து பார்த்தார். அப்போது மதியம் கடைக்கு வந்த ஆணும் பெண்ணும் 2 மோதிரங்களை நைசாக அபேஷ் செய்திருப்பது தெரியவந்தது. கடை உரிமையாளர் பரமசிவன், அலமாரியில் இருந்த நகைகளை எடுக்கும் போது. நகை வாங்க வந்தவர். மோதிரத்தை எடுத்து தனது சட்டை பாக்கெட்டில் போடுவது கண்டுபிடிக்கப் பட்டது. நகை வாங்க வந்தவர்கள் பற்றி அந்த பகுதியில் உடனடியாக விசாரித்த போது எந்த தகவலும்கிடைக்கவில்லை. இதுகுறித்து பரமசிவம் அளித்த புகாரில் திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.