பேருந்தில் பெண்ணிடம் நகை பறிப்பு: 4பெண்கள் கைது

குளித்தலை அருகே பேருந்தில் பயணித்த பெண்ணிடம் 5 பவுன் தங்க நகை பறித்த பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-02-15 09:57 GMT

காவல் நிலையம் 

கரூர் மாவட்டம், குளித்தலை தாலுக்கா, பொருந்தலூர், தெலுங்குபட்டி அருகே உள்ள முத்துபாலகிரி பகுதியைச் சேர்ந்தவர், மோகன் குமார் மனைவி கலைச்செல்வி வயது 21. இவர் பிப்ரவரி 14-ஆம் தேதி காலை ஒன்பதே முக்கால் மணியளவில், தெலுங்கு பட்டியிலிருந்து தோகைமலை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

தோகைமலை பேருந்து நிலையம் வந்ததை அறிந்து பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டுள்ளார். இதனை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டு வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, ராஜகோபால் நகர் அருகே உள்ள மந்தி தோப்பு பகுதியைச் சேர்ந்த பாண்டி மாணிக்கம் மனைவி காயத்ரி என்கிற அபிராமி.

மணி மனைவி சிம்ரன் என்கிற செல்வி வயது 28, பாபு மனைவி பார்வதி என்கிற ஜோதி வயது 39, ராஜா மனைவி காளீஸ்வரி வயது 38 ஆகிய நான்கு பேரும் கலைச்செல்வி கழுத்தில் அணிந்து இருந்த 5- பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனை அறிந்த கலைச்செல்வி உடனே சுதாரித்துக் கொண்டு கூச்சலிட்டதால் பொதுமக்கள் ஒன்று திரண்டு நான்கு பேரையும் சுற்றி வளைத்தனர். சம்பவம் அறிந்த தோகைமலை காவல்துறையினர்,

கலைச்செல்வி இடம் இருந்து பறித்து 5- பவுன் தங்கச்சங்கிலியை மீட்டனர். மேலும், நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தோகைமலை காவல்துறையினர். இந்த சம்பவத்தில் பிடிபட்ட காயத்ரி என்கிற அபிராமி, பார்வதி என்கிற ஜோதி ஆகிய இருவர் மீதும் பல்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News