அரசு பஸ் கண்டக்டர் வீட்டில் நகை திருட்டு
கள்ளகுறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பூட்டிய வீட்டை உடைத்து கொள்ளையடித்த கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Update: 2024-01-08 05:39 GMT
சின்னசேலம் அடுத்த வி.கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னனையன் மகன் ராமசாமி, 51; அரசு பஸ் கண்டக்டரான ஒவர் கடந்த 5ம் தேதி மதியம் 1.30 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு மனைவி அலமேலுவும் வெளியே சென்றுள்ளார். பிற்பகல் 3:00 மணியளவில் வந்து பார்த்தபோது, வீடு திறந்து கிடந்தது. உள்ளே பீரோவில் இருந்த 7 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து வீடு புகுந்து திருடிய நபரைத் தேடி வருகின்றனர்.