கள்ளக்குறிச்சி அருகே வேலை வாய்ப்புக்கான நேர்காணல்
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பாலிடெக்னிக்கில் வேலை வாய்ப்புக்கான நேர்காணல் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில் நடந்த வேலைவாய்ப்பு நேர்காணல் நிகழ்ச்சிக்கு கல்லுாரி தாளாளர் ரகமத்துல்லா தலைமை தாங்கினார். தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் முன்னிலை வகித்தனர்.
கல்லுாரி முதல்வர் கண்ணன் வரவேற்றார். சென்னை சுந்தரம் பிரேக் லைனிங் லிட்., நிறுவன மேலாளர் பிரதாப் 81 மாணவர்களிடம்நேர்காணல் நடத்தினார்.
இயந்திரவியல், ஆட்டோமொபைல் துறைகளை சேர்ந்த மாணவர்களிடையே நேர்காணல் நடத்தி முதற்கட்ட தேர்வில் 58 மாணவர்கள் தேர்வாகி உள்ளனர்.தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் வரும் ஜூன் முதல் பயிற்சி அளிக்கப்பட்டு, அனைவரும் தங்கும் விடுதி வசதியுடன் பணியில் அமர்த்தப்படுவர் என கல்லுாரி தாளாளர் ரகமத்துல்லா தெரிவித்தார்.
கல்லுாரியில் ஆண்டுதோறும் நடக்கும் வளாக நேர்காணலில் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து மாணவ-மாணவியர்களும் தற்போது சிறந்த முறையில் பணியாற்றி வருவதாகவும், எங்களிடம் பயின்று வரும் அனைத்து மாணவ - மாணவியர்களையும் பணியமர்த்தி வைப்பதே எங்கள் குறிக்கோள் எனவும் கல்லுாரி தாளாளர் தெரிவித்தார்.
கல்லுாரி துறைத்தலைவர்கள் விஜயராஜ், சுப்ரமணியன் ஆகியோர் நேர்காணல் ஏற்பாடுகளை செய்து இருந்தனர். கல்லுாரி துணை முதல்வர் பாஸ்கர் நன்றி கூறினார்.