ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரத போராட்டம்
மாநில முன்னுரிமைக்கான அரசாணையை திரும்ப பெற கோரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது.
குமரி மாவட்டம், நாகர்கோவிலில் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை குறைக்கக்கூடிய மாநில முன்னுரிமைக்கான அரசாணையை உடனே திரும்ப பெற வேண்டும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகளான இடைநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மூன்று நபர் குழு மூலம் தீர்வு காண வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் அன்பு இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஜான் கிறிஸ்டோபர், சுரேஷ், செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் டிட்டோஜாக் மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் தியாகராஜன் தொடங்கி வைத்தார். மாலை 5 மணி வரை இந்த உண்ண வர போராட்டம் நடை பெற்றது. இதில் நிர்வாகிகள் நாகராஜன், சும ஹாசன், ராபர்ட் பாபு, உதயகுமார், மந்திரமூர்த்தி, கண்ணன், சாந்தகுமார் பலர் கலந்து கொண்டனர். ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத்தலைவர் சேவியர் முடித்து வைத்து பேசினார்.