ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான பேச்சுப்போட்டி
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பாக அறவழியில் நிகழ்கால வடிவம் கற்பனையா ? நிஜமா ? என்ற தலைப்பில் தேசிய அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது..
இந்த போட்டி குறித்து வணிகவியல் துறை தலைவர் அலெக்சாண்டர் பிரவீன் கூறுகையில்... திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் வைரவிழா மற்றும் பொன்விழா ஆண்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதற்காக இந்த ஆண்டு முழுவதும் வெவ்வேறு நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று தேசிய அளவிலான பேச்சுப்போட்டி நடைபெற்றது. இந்த பேச்சு போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 41 அணிகள் கலந்து கொள்ள வந்திருக்கின்றனர்.
இந்த 41 அணிகளில் இருந்து 5 அணிகள் இறுதியாக தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த போட்டியில் அறவழியில் நிகழ்கால வடிவம் கற்பனையா ? நிஜமா ? என்ற தலைப்பில் நாட்டில் நடக்கின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு இத்தகைய கேள்வியை மாணவர்கள் மத்தியில் எழுப்பி உள்ளோம் அது குறித்து அவர்கள் இந்த கருத்தரங்கில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய மாணவர்களின் விழிப்புணர்வு எந்த அளவில் உள்ளது. தங்களை சுற்றி நடப்பவைகளை அவர்கள் அறிந்திருக்கிறார்களா? இன்று இந்திய அளவில் அவர்கள் கண்ணோட்டம் எப்படி இருக்கிறது என்பதை கருத்தில் கொண்டு இந்த பேச்சுப்போட்டி நடைபெறுகிறது. இதில் மேகாலயா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, பாண்டிச்சேரி, மற்றும் தமிழ்நாடு என இந்தியா முழுவதிலும் இருந்து 41 அணிகள் வந்துள்ளனர். இந்த போட்டியில் தேர்ச்சி பெரும் ஒருவருக்கு ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக வருகின்ற 9-ம் தேதி சிறப்பு சொற்பொழிவு நடத்த இருக்கிறோம்..