100 நாள் பணியாளருக்கு அறிவுரை சொன்ன ஜோதிமணி
தொகுதிக்குள் சுற்றுபயணம் மேற்கொண்ட கரூர் எம்பி ஜோதிமணி
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, இன்று தனது தொகுதிக்குட்பட்ட கடவூர் தாலுகா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, கடவூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாழ்வார்மங்கலம் ஊராட்சியில் உள்ள 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை பணி செய்யும் இடத்தில் சந்தித்தார். அப்போது, அவர்களது குறைகளை கேட்டறிந்தார். 100 நாள் திட்ட பணியாளர்களிடம் நாள் ஒன்றிற்கு உங்களுக்கு எவ்வளவு ஊதியம் வழங்குகிறார்கள்? என கேள்வி எழுப்பினார். அப்போது, பணியாளர்கள் நாள் ஒன்றுக்கு ரூபாய் 240 அளிப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ஜோதிமணி அதிகாரிகளிடம் விசாரித்த போது, 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒதுக்கும் பணியினை முழுதாக முடிக்காத போது, அவர்கள் முடித்த பணிக்கேற்ற ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். அப்போது, 100 நாள் திட்ட பணியாளர்களுக்கு, முடிந்தவரை முழு பணியையும் முடித்தால்தான் முழு ஊதியத்தையும் பெற முடியும். எனவே, அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் என அவர்கள் வாழ்வதற்கான பொருளாதார வாய்ப்பினை எடுத்துக் கூறினார். 100 நாள் திட்ட பணியாளர்களும் இனி வரும் காலங்களில் அது போன்று செயல்படுவதாக தெரிவித்தனர்.